செய்திகள் :

Doctor Vikatan: ஓய்வா, உடற்பயிற்சியா... கர்ப்ப காலத்தில் எது சரி, எது தவறு?

post image

Doctor Vikatan: கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வது சரியானதா... வீட்டிலுள்ள பெரியவர்கள் ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள்... மருத்துவர்களோ உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துகிறார்கள். இரண்டில் எது சரி?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் செய்து ஆக்டிவ்வாக இருப்பதன் மூலம், உங்களுடைய பிரசவம் எளிதாக நிகழும் வாய்ப்பிகள் அதிகரிக்கும். 

கர்ப்ப காலத்தில் ஏன் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்து உங்கள் உடல் தோரணை (posture)  சரியாக இருக்க உடற்பயிற்சிகள் உதவும். அதன் மூலம் கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப நீங்கள் தயாராகவும் முடியும். உங்களை இன்னும் ஆக்டிவ்வாக  வைத்துக்கொள்ளவும் எனர்ஜியுடன் இருக்கச் செய்யவும் உதவும்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் செய்யலாம் என்றாலும் எந்தப் பயிற்சிகளைச் செய்யலாம், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். உங்களுக்கு அதுவரை செய்து பழக்கமே இல்லாத பயிற்சிகளையோ, உடலை வருத்தும்படியான பயிற்சிகளையோ செய்யவே வேண்டாம்.

கர்ப்பமாவதற்கு முன்புவரை தினமும் 30 நிமிடங்கள் நடந்து பழக்கமுள்ளவர் என்றால், கர்ப்ப காலத்திலும் அதைத் தொடரலாம். ஆனால், அதில் உங்களுக்கு எந்த அசௌகர்யமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடற்பயிற்சிகள் செய்யும்போது அவ்வப்போது திரவ உணவுகள், தண்ணீர் குடித்து உங்கள் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பகால உடற்பயிற்சி

ஒரு நாள் மணிக்கணக்காக உடற்பயிற்சி செய்வது, அடுத்த நாள் அறவே செய்யாமலிருப்பது என்றிருக்காமல், தினமும் சிறிது நேரம் மிதமான பயிற்சிகளைச் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிகள் செய்வது உங்கள் குழந்தைக்கு ஆபத்தானது என்று நினைக்க வேண்டாம்.  அதே சமயம், உங்களுடைய கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பது தெரிந்து உங்களை ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தியிருந்தால், அதை அப்படியே பின்பற்றுவதுதான் சரியானது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Health: கர்ப்பிணிகள் ஏன் இடதுபுறம் ஒருக்களித்து படுக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் ஒருக்களித்துதான் படுக்க வேண்டுமா, ஏன் நேராக படுக்கக்கூடாது, எந்த வாரத்திலிருந்து குழந்தையின் அசைவை உணர முடியும், நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டால் நார்மல் டெலிவரி ஆகாதா என்பதுபோன்ற எக்கச்ச... மேலும் பார்க்க