செய்திகள் :

Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட்

post image

இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட், தன்னுடைய மகள்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் முன்னால் பேசிய வீடியோ ஒன்று பலருடைய மனதையும் உருக்கும் வண்ணம் இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் சிறார்களுக்கான நீதிக்குழு சார்பாக, மாற்றுத்திறனாளி மற்றும் அரிதான மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக நடத்தப்பட்ட வருடாந்திர தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்குகொண்டு அவர் பேசியபோது, தன்னுடைய மகள்களுக்கு இருக்கிற நிமோலியன் மையோபதி (Nemaline myopathy) என்கிற பிரச்னை குறித்து பகிர்ந்துகொண்டார்.

Chandrachud and his daughters

''என்னுடைய இரண்டு மகள்களுக்கும் மிகவும் அரிதான நிமோலியன் மையோபதி (Nemaline myopathy) என்கிற எலும்புத்தசை பலவீன நோய் இருக்கிறது. இது மரபணுத் தொடர்பான நோய். அவர்கள் பிறக்கும்போதே இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்தான விழிப்புணர்வு மருத்துவர்களுக்கும் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இல்லை. அதனால், அந்தக் குழந்தைகளை அவர்கள் கைவிட்டு விட்டார்கள். அதற்காக அவர்களை குற்றம் சொல்ல முடியாது.

இந்த நோய்க்கான மருத்துவப் பரிசோதனைகள் வலி மிகுந்தவை. மயக்க மருந்து கொடுக்காமல்தான் பரிசோதனைக்கான திசுக்களை என் குழந்தைகளிடம் இருந்து எடுப்பார்கள். அந்தப் பரிசோதனை செய்யப்பட்ட அந்த நாள் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது. மூத்த குழந்தை தன்னுடைய பரிசோதனையை முடிந்து வெளியே வந்தப்பிறகு, ' என்னுடைய தங்கை இந்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம்' என்று அழுதாள். அவர்களுக்கு தேவையான பரிசோதனை வசதிகளோ, பள்ளிக்கூட வசதிகளோ உத்தரகாண்டில் இல்லை.

அவர்களை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிக்கூடத்தையும் நான் அணுகினேன். ஆனால், 'உங்கள் குழந்தைகளுடைய உடல்நிலை மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுடைய அறிவுத்திறன் மற்ற குழந்தைகளைவிட மிகக்கூர்மையாக இருக்கிறது' என்றார்கள்'' என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் சந்திரசூட்.

சந்திரசூட்

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், 'உங்கள் பேச்சைக் கேட்க கேட்க எங்களால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளர்ப்பதற்கு நன்றி, உங்கள் மனிதத்தன்மையை வணங்குகிறோம்' என்று எக்கச்சக்க பாசிட்டிவ் கமென்ட்ஸ் போட்டிருக்கிறார்கள்.

இந்த இரு குழந்தைகளின் பிரச்னையைக் குறித்து பேசுகிற மருத்துவர்கள், 'இது மிகவும் அரிதானப் பிரச்னை. 50 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்பிருக்கிற நோய். குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால், அது மரபணு வழியாக அடுத்தடுத்தத் தலைமுறையையும் பாதிக்கும். உடல் இயக்கத்துக்கு தேவையான புரதங்களை இந்த நோய் பாதிக்கும். இதனால், அவர்களுடைய தசை மெலியும். உடலின் பல பகுதிகளில் பலவீனமாக உணர்வார்கள். மூச்சு விடுவதில் ஆரம்பித்து உணவை விழுங்குவது வரைக்கும் இவர்களுக்கு கடினமாக இருக்கும். இந்த நோயின் அறிகுறிகளை சீக்கிரமாக கண்டறிந்துவிட்டால், அவர்கள் நிலையை மேம்படுத்துவதற்கு உதவும்' என்கிறார்கள்.

Israel - Gaza: ``என்னிடம் மூன்று செய்திகள் இருக்கிறது..." - போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர்!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா... எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச்சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா... தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதி... மேலும் பார்க்க

``தமிழகத்தின் இருமொழி கொள்கையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்'' - ப.சிதம்பரம்

"தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ரவி - ப.சிதம்பரம்... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் விவகாரத்தில் பாஜக அரசின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.." - செல்வப்பெருந்தகை தாக்கு

பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் போரை நிறுத்த வேண்டும் என அமைதிக்கான மக்கள் இயக்கம் கருத்தரங்க கூட்டம் ராயப்பேட்டை ரம்ஜான் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வே சார்பில் மதுரையில் Track Machine பராமரிப்பு நிலையம்..!

மதுரை விளாங்குடியில் முதன்முதலாக இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரத்தை (Track Machine) சரிபார்க்க ஒரு பெரிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரங்களை பழுது நீ... மேலும் பார்க்க

மதுரை: பல நூற்றாண்டுகளாக விவசாயத்திற்கு உதவிய கிருதுமால் நதி... கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம்..!

மதுரை மாவட்டம் நாகமலை அடிவாரத்தில் அமைந்த துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகிறது. இது மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாயை அடைகிறது. பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழவலசை எனுமிடத்தில் ... மேலும் பார்க்க