செய்திகள் :

Israel - Gaza: ``என்னிடம் மூன்று செய்திகள் இருக்கிறது..." - போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர்!

post image

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர். இந்த நிலையில், நேற்று, அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். அவரின் இறப்பை ஹமாஸ் அமைப்பும் உறுதிபடுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இஸ்ரேல் நெதன்யாகு

அதில், ``இஸ்ரேலின் துணிச்சலான வீரர்களின் தாக்குதலில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இன்னும் காஸாவில் போர் முடிவடையவில்லை என்றாலும், இது போர் முடிவின் ஆரம்பம். காஸா மக்களே, எனக்கு உங்களிடம் தெரிவிக்க ஒரு செய்தி இருக்கிறது. அதுதான், ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி நடந்தால் இந்தப் போர் முடிவுக்கு வரும். ஹமாஸ் காஸாவில் 23 நாடுகளின் குடிமக்கள், இஸ்ரேலின் குடிமக்கள் என 101 பணயக்கைதிகளை வைத்திருக்கிறது. அவர்கள் அனைவரையும் மீட்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உறுதியாக இருக்கிறோம்.

அவர்கள் அனைவரின் பாதுகாப்பிற்கும் இஸ்ரேல் உத்தரவாதம் அளிக்கும். அதே நேரம் எங்கள் பணயக்கைதிகளுக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு கூற என்னிடம் மற்றொரு செய்தி உள்ளது. ஆம், இஸ்ரேல் உங்களை வேட்டையாடி நீதிக்கு முன் கொண்டு வரும். நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியையும் நான் வைத்திருக்கிறேன்.

பெய்ரூட் தாக்குதல்

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா, அவரது துணைவர் மொஹ்சென், ஹாமஸ் தலைவர் ஹனியே, டெய்ஃப், சின்வார் ஆகியோர் கொலை செய்யப்பட்டுவிட்டனர். ஈரானிய ஆட்சி தனது சொந்த மக்கள் மீதும் ஈராக், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் மக்கள் மீதும் திணித்த பயங்கர ஆட்சியும் முடிவுக்கு வரும். ஈரானால் கட்டமைக்கப்பட்ட பயங்கரவாதத்தின் அச்சு நம் கண்முன்னே சரிந்து கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட், தன்னுடைய மகள்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் முன்னால் பேசிய வீடியோ ஒன்று பலருடைய மனதையும் உருக்கும் வண்ணம் இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் சிறார்களுக்கான நீதி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா... எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச்சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா... தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதி... மேலும் பார்க்க

``தமிழகத்தின் இருமொழி கொள்கையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்'' - ப.சிதம்பரம்

"தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ரவி - ப.சிதம்பரம்... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் விவகாரத்தில் பாஜக அரசின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.." - செல்வப்பெருந்தகை தாக்கு

பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் போரை நிறுத்த வேண்டும் என அமைதிக்கான மக்கள் இயக்கம் கருத்தரங்க கூட்டம் ராயப்பேட்டை ரம்ஜான் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வே சார்பில் மதுரையில் Track Machine பராமரிப்பு நிலையம்..!

மதுரை விளாங்குடியில் முதன்முதலாக இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரத்தை (Track Machine) சரிபார்க்க ஒரு பெரிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரங்களை பழுது நீ... மேலும் பார்க்க

மதுரை: பல நூற்றாண்டுகளாக விவசாயத்திற்கு உதவிய கிருதுமால் நதி... கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம்..!

மதுரை மாவட்டம் நாகமலை அடிவாரத்தில் அமைந்த துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகிறது. இது மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாயை அடைகிறது. பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழவலசை எனுமிடத்தில் ... மேலும் பார்க்க