செய்திகள் :

தில்லியில் மோசமான காற்று மாசுக்கு பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளே காரணம்!

post image

தேசிய தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆகிய இரு கட்சிகளும் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியது,

யமுனா நதி நீரைக் குடிநீராக மாற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் தற்போது குளிப்பதற்கும் ஏற்றதாக இல்லை. அரவிந்த் கேஜரிவால் முன்னதாக பெரிய வாக்குறுதிகளை அளித்ததாகவும், ஆனால் அவற்றைச் செயல்படுத்த தவறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

காற்றின் மாசு அளவு உச்சத்தில் இருக்கும்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசு தேவையற்ற விஷயங்களில் தலையிடுகிறது. துணைநிலை ஆளுநரும் அமைதியாக இருக்கிறார்.

உலகெங்கிலும் உள்ள பிற தலைநகரங்களில் காற்றின் மாசுவைக் கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால் தில்லியில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதெல்லாம் கட்சிகள் சாக்குப்போக்கு சொல்லிவருவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:எதிர்கால அரசியல் பொறுப்புகளை கேஜரிவால் தீர்மானிப்பார்: சத்யேந்தர் ஜெயின்

தலைநகரில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் மோசமடையும். கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் காற்று தரக் குறியீடு(AQI) 293 ஆகப் பதிவாகியுள்ளது. காற்றின் தரம் மோசமான பிரிவில் இருந்ததால் தில்லியில் இன்று காலை புகை மூட்டமாகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் கேஜரிவால் ஆலோசனை!

தில்லியில் சட்டப்ரேவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பிடம்புரா பகுதியில் ஆம் ஆத்... மேலும் பார்க்க

கார் மோதி 6 பேர் பலி!

பிகாரில் கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.பிகாரின் பாங்கா மாவட்டத்தில் வேகமாக வந்த எஸ்யூவி ரகக் கார் ஒன்று, வெள்ளிக்கிழமை (அக். 18) இரவு 8.30 மணியளவில் பாதசாரிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானத... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா வருகை!

இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.... மேலும் பார்க்க

போதைப்பொருள் வைத்திருந்த கேரள நடிகை கைது!

கேரளத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நடிகையை காவல்துறையினர் கைது செய்தனர்.கேரளத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த நடிகை ஷம்நாத் (34) போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ... மேலும் பார்க்க

மீண்டும் வன்முறை! மணிப்பூரில் என்ன நடக்கிறது?

மணிப்பூரில் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மெய்தி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் குக்கி பழங்குடியினரும... மேலும் பார்க்க

பத்திரிகையாளர்களுடன் பேசிய காவலில் இருந்த குற்றவாளி! 3 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

காவல் கண்காணிப்பில் இருந்த பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த யோகேஷ், பத்திரிகையாளர்களுடன் பேசும் விடியோ வைரலானதால், காவலில் இருந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாகக... மேலும் பார்க்க