செய்திகள் :

காசு கொடுத்தால்தான் விபூதி; தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல: உயர் நீதிமன்றம்

post image

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வந்த போது, நீதிபதிகள் இவ்வாறு கூறினர்.

மேலும், தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் என்றும் நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கனகசபை மீது ஏறி பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், அது மட்டுமல்லாமல், நடராஜர் கோயில் தீட்சிதரை பணியிடை நீக்கம் செய்ததும் பிரச்னையானது.

இந்த நிலையில், நடராஜர் கோயில் தீட்சிதர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையத்திடம் புகார் அளித்தார். புகாரை ஏற்ற, கடலூர் இணை ஆணையர், பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்தார்.

இந்த ரத்து உத்தரவை, நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் எதிர்த்து முறையீடு செய்தனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜர் கோயில் தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நடராஜர் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என தீட்சிதர்கள் நினைப்பதாகவும் அதனை தாங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க.. தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசு

இதனைக் கேட்ட நீதிபதி, மன கஷ்டங்களை போக்க கோயிலுக்கு வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.

தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்ல அறிகுறி அல்ல என்றும், பக்தர்கள் இல்லாவிட்டால் கோயில் இல்லை. பக்தர்கள் வரும்வரைதான் கோயில், பக்தர்கள் இல்லாவிட்டால் கோயில் பாழாகிவிடும். கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருபவர்களைபோல தீட்சிதர்கள் நடத்துகிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தங்களுக்கே சொந்தமானது என்று தீட்சிதர்கள் கருதுவதாகவும், அவர்கள் தங்களை கடவுளுக்கும் மேலானவர்களாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

காசு கொடுத்தால்தான் பூ கிடைக்கும், இல்லாவிட்டால் விபூதி கூட கிடைக்காது என்றார். மேலும், சிதம்பரம் கோயிலில் மட்டுமே நடத்தப்பட்ட ஆருத்ரா தற்போது பல்வேறு கோயில்களிலும் நடக்கிறது. அது மட்டுமல்ல, முன்பைப் போல், ஆருத்ரா தரிசனம் காண சிதம்பரம் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவதில்லை என்றும் நீதிபதி தண்டபாணி கூறியிருக்கிறார்.

பொது தீட்சிதர்கள் மனு மீது பதிலளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ரூ. 247 கோடி ஒதுக்கீடு!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்ப... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் ஓரிரு இடங... மேலும் பார்க்க

'ஆளுநர் கற்பனை உலகத்தில் இருக்கிறார்' - ப. சிதம்பரம்

தமிழ்நாட்டில் இந்தி கற்க மாணவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை, ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்டரை திறக்க முடிவு செய்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் வெள... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க