1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் `வைர பேட்டரி'யை உருவாக்கிய விஞ்ஞானிகள்! - எதற்கெல...
Earthquake: 5.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் - தெலங்கானாவில் பதற்றம்!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் இருக்கிறது முலுகு மாவட்டம். இந்தப் பகுதியில் இன்று காலை 7:27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், ``ஹைதராபாத்திலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் இருக்கும் முலுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நில நடுக்கத்தால் அந்தப் பகுதியே பரப்பானது. சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அந்தப் பகுதியில் இருக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
கூடுதல் தகவலுக்காக காத்திருக்கிறோம்!!!