செய்திகள் :

`Pushpa 3- The Rampage!' - மூன்றாம் பாகத்துக்கு லீட்!; `புஷ்பா 2' பற்றிய சாம்.சி.எஸ் பதிவு..!

post image
`புஷ்பா - 2' திரைப்படம் பிரமாண்டமாக டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

`புஷ்பா- 1' திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இரண்டாம் பாகத்திற்காக வேறு எந்த திரைப்படத்திலும் கமிட்டாகாமல் முழுமையாக தயாராகி இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அல்லு அர்ஜூன். இத்திரைப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைப்பதாக முன்பு அறிவித்திருந்தனர்.

`ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படத்தின் பாடல்களை மட்டும் அவர் கம்போஸ் செய்திருக்கிறார். பின்னணி இசை வேலைகளை சாம். சி.எஸ் செய்திருக்கிறார்.' என்ற தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்த தகவலை உறுதி செய்யும் விததில் `புஷ்பா 2' திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வில் தயாரிப்பு நிறுவனம் மீது அதிருப்தி காட்டி சில விஷயங்களை பேசியிருந்தார் தேவி. ஶ்ரீ. பிரசாத். இதனை தொடர்ந்து சாம். சி.எஸும் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் `புஷ்பா 2' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சூசகமாக அப்டேட் கொடுத்திருந்தார்.

தற்போது அது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சாம். சி.எஸ். அவர், `` புஷ்பா -2 திரைப்படம் எனக்கு முக்கியமான பயணம். என்னை தேர்ந்தெடுத்து இந்த பேரனுபவத்தைக் கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்களின் உறுதுணை மற்றும் நம்பிக்கை இல்லையென்றால் இந்த விஷயம் சாத்தியமாகியிருக்காது. அல்லு அர்ஜூன் மிகவும் அன்பானவர். அல்லு அர்ஜூனுக்கு இசையமைத்தது எனக்கு கூடுதல் அனுபவத்தையும் கொடுத்தது. அதன் பிறகு முக்கியமாக லென்ஸுக்கு பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி பேச வேண்டும். அவர்தான் இயக்குநர் சுகுமார். உங்களுடன் இந்த மேக்னம் ஓபஸ் ப்ராஜெக்ட்டில் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் பணியாற்றியதெல்லாம் ஒரு புதிய அனுபவம்." எனப் படக்குழுவினருக்கு நன்றிக் கூறி பதிவிட்டிருக்கிறார்.

Pushpa 3 Update

இதுமட்டுமல்ல , திரைப்படம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. புஷ்பா முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் வருமென லீட் கொடுத்திருந்தார்கள். தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் மூன்றாம் பாகத்திற்கான அப்டேட்டையும் இணைத்திருக்கிறார்களாம். இந்த இரண்டு பாகங்களுக்கும் ஒவ்வொரு டேக் லைனை குறிப்பிட்டிருந்தது படக்குழு. முதல் பாகத்துக்கு `தி ரைஸ் (The Rise)' எனவும், இரண்டாம் பாகத்திற்கு `தி ரூல் (The Rule) ' எனவும் குறிப்பிட்ட படக்குழு மூன்றாம் பாகத்துக்கு `தி ராம்பேஜ் (The Rampage)' எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு

பிரமாண்டமான முறையில் இன்று வெளியாகியருக்கிறது `புஷ்பா 2 - தி ரூல்'.பொதுவாக ஒரு வெற்றிகரமான திரைப்படத்தைக் கொடுத்த பிறகு பல நடிகர்களும் அந்த வெற்றியின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து பல திரைப்ப... மேலும் பார்க்க

Pushpa 2: ``எங்களுக்கு பெருமை சேர்த்த முதல் தெலுங்கு பெண்..." ஶ்ரீ லீலாவை புகழ்ந்த அல்லு அர்ஜுன்

̀புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர். இத... மேலும் பார்க்க

`` புஷ்பா-2 படத்தை விளம்பரப்படுத்த தேவையில்லை, ஏனென்றால்...!''- இயக்குநர் ராஜமௌலி சொல்வதென்ன?

கடந்த 2021 ஆம் ஆண்டு 'புஷ்பா- 1' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.இதனைத்தொடர்ந்து 'புஷ்பா-2' திரைப்படம் பிரமாண்டமாக டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ... மேலும் பார்க்க

Allu Arjun: `அவர் அப்படிப் பயன்படுத்தக் கூடாது" - அல்லு அர்ஜுனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்!

̀புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர். நட... மேலும் பார்க்க

Naga Chaitanya - Sobhita: 'மால டம் டம்..!' - நாக சைதன்யா - சோபிதா ப்ரீ வெட்டிங் படங்கள் |Photo Album

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்... https://bit.ly/MadrasNallaMa... மேலும் பார்க்க

Naga Chaitanya: `சென்ட்டிமென்ட் இடம்!; ஓடிடி ஒப்பந்தம்!' - மேரேஜ் சீக்ரெட்ஸ் சொல்லும் நாக சைதன்யா!

நடிகர் நாக சைதன்யாவுக்கும் - நடிகை சோபிதாவுக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது.நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. அடுத்த மாதம் நான்காம் தேதி இ... மேலும் பார்க்க