Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
Allu Arjun: `அவர் அப்படிப் பயன்படுத்தக் கூடாது" - அல்லு அர்ஜுனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்!
̀புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர். நடிகர் விஜய் நண்பா என அழைப்பது போல, நடிகர் அல்லு அர்ஜுன் தன் ரசிகர்களை ஆர்மி என அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் ̀புஷ்பா 2' திரைப்படப் படத்துக்கான புரோமோஷன் மும்பையில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அல்லு அர்ஜுன், ``எனக்கென ரசிகர்களெல்லாம் இல்லை; எனக்காக இருப்பது ராணுவம். நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன். என் ரசிகர்கள் என் குடும்பம் போன்றவர்கள். அவர்கள் ஒரு ராணுவத்தைப் போல எனக்காக, என்னோடு நின்று, என்னைக் கொண்டாடுகிறார்கள். எனவே, எப்போதும் நான் என் ரசிகர்களான உங்களைப் பெருமைப்படுத்துவேன். இந்தப் படம் பெரிய வெற்றி பெறும், அதை எனது ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்" எனப் பேசினார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர் நகர் காவல் நிலையத்தில், the Green Peace Environment and Water Harvesting Foundation தலைவர் ஸ்ரீனிவாஸ் கவுட், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எதிராகப் புகார் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அதில், ``டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர் பட்டாளத்தை அழைக்க ஆர்மி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அப்படி அவர் பயன்படுத்தக் கூடாது.
ராணுவம் என்பது ஒரு கௌரவமான பதவி. அந்த வீரர்கள்தான் நம் நாட்டைப் பாதுகாப்பவர்கள். அவர்களை அடையாளப்படுத்தும் அந்த வார்த்தையை உங்கள் தனிப்பட்ட ரசிகர்களுக்கான வார்த்தையாக அழைப்பது கூடாது. அதற்கு பதிலாக அவர் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தட்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.