Honey Rose: "ரொம்ப அழகா இருக்க நடிக்க வர்றியான்னு 7வது படிக்கும்போதே கேட்டாங்க" ...
Rain Alert : தொடரும் மழை... இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!
கடந்த வாரத்திலும், இந்த வாரத்திலும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கின்றது.
தொடர் மழையினால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட பகுதிகள்...
விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம்.
புதுச்சேரியில் முகாமாக மாற்றப்பட்டுள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
வானிலை மைய தகவலின் படி, இன்று திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையில் ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்தது. இதனால், பல இடங்களிலும் நீர் தேங்கி உள்ளது. அப்படி கனமழையால் பள்ளிகளில் நீர் தேங்கியிருந்தால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என்று சென்னை மாவட்ட முதன்மை அதிகாரி நேற்று முன்தினம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.