செய்திகள் :

Sunscreen: இந்த சம்மருக்கு உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?!

post image

இன்றைய தலைமுறையினர் தங்களது சருமங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஸ்கின் கேரை பின்பற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே தங்களது சர்மங்களை பாதுகாக்க சன் ஸ்கிரீனை பயன்படுத்தி வருகின்றனர்.

சன் ஸ்கிரீன் எப்படி தேர்வு செய்ய வேண்டும்... எந்தெந்த வகையில் உள்ளது என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். இது குறித்து G கிளிக் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா விகடனுக்கு பகிர்ந்துள்ளார்.

``சூரியன் வெளியிடும் அல்ட்ரா வயலட் (Ultra Violet) கதிர்களில் ஏ, பி, சி (UVA, UVB, UVC) என மூன்று விதமான கதிர்கள் உள்ளன. இதில் அல்ட்ரா வயலட் ஏ மற்றும் பி சருமத்தை அதிகமாகவே பாதிக்கும். இது வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். அதவாது முக சுருக்கங்களை ஏற்படுத்தும். ஒரு சன் ஸ்கிரீன் தேர்வு செய்கிறோம் என்றால் broad spectrum சன் ஸ்கிரீன் ஆக இருக்க வேண்டும் அதாவது UVA, UVB எல்லாவற்றிலிருந்து நமது சருமத்தை பாதுக்காப்பது போல் வாங்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் கோல்டா.

``சன்ஸ்கிரீனை வாங்கும்போது, அதில் SPF (Sun Protection Factor SPF) பார்த்து வாங்க வேண்டும். வீட்டிற்குள் இருந்தால் SPF 30 - 50 இருக்க வேண்டும், வெளியில் செல்கிறோம் என்றால் SPF 50 அதற்கு மேல் இருக்க வேண்டும்.

அடுத்ததாக, சன்ஸ்கிரீனில் SPF PA +++ என்று குறிப்பிட்டிருந்தால், இது அல்ட்ரா வயலட் கதிர் 'ஏ'-ல் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும் என்று அர்த்தம். அதற்கு ஏற்ப சன்ஸ்கிரீன் வாங்கும்போது இதனையும் கவனிக்க வேண்டும்.

சன் ஸ்கிரீன் ஜெல், லோசன், கிரீம் தன்மைகளில் மார்கெட்டில் கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கும் முன் நம் சருமத்தின் தன்மையை அறிய வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் கலந்த SPF பயன்படுத்தலாம்.

எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஜெல், அல்லது மேட் ஃபினிஷில் கிடைக்கக்கூடிய சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். கிரீம், லோஷன், ஃபவுண்டேஷன் கலந்தும்கூட சன்ஸ்கிரீன் கிடைக்கிறது. தங்களின் தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம்." என்கிறார்.

தற்போது மார்க்கெட்டில் புது ட்ரெண்டிங்கில் இருக்கும் பவுடர் வடிவ சன் ஸ்கிரீன் எந்த அளவுக்கு சருமத்தை பாதுகாக்கும் என்றும் விளக்குகிறார்.

``முகத்திற்கு இரண்டு விரல் முறையில் சன் ஸ்கிரீன் தடவ அறிவுறுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு அப்ளை செய்தால் தான் சூரிய ஒளியிலிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இந்த பவுடர் சன் ஸ்கிரீனை நாம் எந்த அளவிற்கு பயன்படுத்த முடியும்? அதிகமாகவும் பயன்படுத்த முடியாது.

எனவே, முகத்திற்கு முதலில் ஜெல் அல்லது கிரீம் வடிவ சன்ஸ்கிரீன் பயன்படுத்திய பிறகு வேண்டுமென்றால்... இந்த பவுடர் சன்ஸ்கிரீனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதனை மட்டும் பயன்படுத்தினால் சருமத்திற்கு அந்த அளவிற்கு பாதுகாப்பு கிடைக்காது.

கோடைகாலம் மட்டுமல்ல குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும், குளிர்காலத்திலும் சூரியன் இருப்பதால் எப்போதும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்."

Tretinoin: டிரெண்டிங்கில் இருக்கும் ட்ரெடினோயின் கிரீம்; மருத்துவர் எச்சரிப்பது என்ன?

சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ட்ரெடினோயின் க்ரீம், எப்படிச் சாதாரண மக்கள் மத்தியிலும் இன்ஃப்ளூயன்சர், சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பரிச்சயமானது. எதற்காக இவ்வளவு ஹைப் கொடுக்கிறார்கள், இந... மேலும் பார்க்க

Ever youth: வயசானாலும் உங்க இளமை குறையாமல் இருக்க 15 டிப்ஸ்..!

யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? டோன்ட் வொர்ரி... முதுமையைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார், சென்னை அரசு யோகா மற்று... மேலும் பார்க்க

Ice Cube For Face: ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறுமா? அழகியல் மருத்துவர் சொல்வெதன்ன?

செலிப்ரிட்டி முதல் இன்ஃப்ளூயன்சர் வரை ஸ்கின் கேர் குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ஐஸ் க்யூப் ஸ்கின் கேர் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்ட வருகி... மேலும் பார்க்க

Beauty: பிம்பிள்கள் ஏன் வருகின்றன? சிம்பிளான இயற்கை தீர்வுகள் இதோ!

பருக்கள் ஏன் வருகின்றன?சமச்சீரற்ற ஹார்மோன்கள், அதிகமான எண்ணெய் உணவுகளைச் சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல், மனப் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, சரியான பராமரிப்பின்மை, பொடுகுத்தொல்லை,... மேலும் பார்க்க

Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை... இயற்கை அழகி முல்தானி மட்டி!

முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு! 'முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள்... மேலும் பார்க்க