செய்திகள் :

TVK: தவெக நிர்வாகி மறைவு: "ஏன்டா இப்படிப் பண்ண.." - கதறி அழுத்த ஆனந்த்; இரங்கல் தெரிவித்த விஐய்

post image
அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்கட்சியின் நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் என்பவரும் கடந்த சில நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளைச் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் விக்கிரவாண்டியிலிருந்து புதுச்சேரியில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பிய சரவணன், தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தவெக

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுப் பணிகளைக் கவனித்து வந்த மாநிலச் செயலாளர் சரவணன் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர். கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

சரவணனின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த், அவரது உடலைப் பார்த்துக் கதறி அழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. "ஏன்டா இப்படிப் பண்ண, 5 நிமிஷத்துல வரேன்னு சொன்னியே டா.." என உடைந்து ஆனந்த் அழுகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Vijay: TVK மாநாட்டில் ஜார்ஜ் கோட்டை தீம்; ஏற்பாடுகள் என்னென்ன? | Spot Visit

தமிழக அரசியலில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிற விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை பகுதிக்குச்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக 156, சிவசேனா 78, அஜித்பவாருக்கு 54 - கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு அப்டேட்

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியும் தொகுதிப் பங்கீடு குறித்து பே... மேலும் பார்க்க

`ராஜ கண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு’ - அறப்போர் இயக்கம்

'அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலம் கிட்டதட்ட ரூ.400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக' அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

காமராஜர் குறித்து `சர்ச்சை கருத்து' தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி; கொதித்த காங்கிரஸ், தமிழிசை

'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத... மேலும் பார்க்க

Stalin: "சென்னை வருகிறேன் என்றார்; வந்தார். ஆனால்..." - முரசொலி செல்வம் குறித்து ஸ்டாலின் உருக்கம்

கடந்த 10 ஆம் தேதி முரசொலி நாளிதழ் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம் காலமானார்.இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நேற்று (21.10.202... மேலும் பார்க்க

Elon Musk: "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது; ஏனென்றால்.." - எலான் மஸ்க் சொல்லும் காரணம்

நீங்கள் 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார் எலான் மஸ்க்.உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த... மேலும் பார்க்க