செய்திகள் :

Vikatan Tele Awards 2024: "எல்லா பெண்களும் சுயமரியாதைக்காகத்தான் ஓடிக்கிட்டிருக்காங்க" - கண்மணி

post image

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது.

இதில் செய்திவாசிப்பாளர் கண்மணியை 2024-ம் ஆண்டின் 'Best News Reader'ஆக தேர்வு செய்து விருது வழங்கப்பட்டிருக்கிறது.

செய்தி வாசிப்பாளர் கண்மணி
செய்தி வாசிப்பாளர் கண்மணி

இதில் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கும் கண்மணி, ``இந்தச் செய்தித்துறைக்கு, செய்தி வாசிப்பாளராக வந்து எட்டு வருஷதுக்கு மேல ஆகிடுச்சு, விகடன் விருதுதான் என்னோட முதல் விருது. ரொம்ப மகிழ்ச்சியா, பெருமையா இருக்கு.

வாழ்க்கையில நிறைய ஏற்ற, இறக்கங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ரொம்ப உடைஞ்சுபோய் உட்கார்ந்திருக்கேன். அப்போவெல்லாம், எங்க அப்பாதான் எனக்கு நம்பிக்கை குடுத்து ஓட வெச்சிட்டிருந்தார். நிறைய தடைகளை, சவால்களை எதிர்கொண்டிருக்கேன்.

என் வீட்டுக்கு ஓடி வந்து நிறைய பிள்ளைகள், மாணவர்கள் ‘உங்களை மாதிரி ஆகணும்னு ஆசை’னு சொல்லுவாங்க. அவங்களுக்காக நான் இன்னும் ஓடணும், முன்னேறணும். நான் விழுந்துட்டா, ‘கண்மணி அக்கா போய் என்ன ஆச்சு தெரியுமா?’னு சொல்லி யாரையும் இந்தத் துறைக்கே வரவிட மாட்டாங்க. அவங்களுக்காக நான் உறுதியா ஓடிக்கிட்டே இருப்பேன்.

செய்தி வாசிப்பாளர் கண்மணி
செய்தி வாசிப்பாளர் கண்மணி

எல்லா பெண்களும் பணத்துக்காக வேலை செய்யறதில்லை, சுயமரியாதைக்காகத்தான் ஓடிக்கிட்டிருக்காங்க. அதுதான் ரொம்ப முக்கியம். அவங்களுக்குக் கை கொடுக்கும் எல்லா ஆண்களும் என்னைப் பொறுத்தவரை ஆண் தேவதைகள்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷினியின் கேள்வி என்ன?

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் 2024-ம் ஆண்டின் `சிறந்த தொகுப்பாளர் விருது’ மா.பா.கா ஆனந்த்துக்கு வழங... மேலும் பார்க்க

Vikatan Tele Awards 2024: "கொஞ்சம் மிஸ் ஆனா Bigg Boss வீட்டுக்குள்ளயே அடிப்பாங்க" - விஜய் சேதுபதி

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்க... மேலும் பார்க்க

Vikatan Tele Awards 2024: "'சிறகடிக்க ஆசை'-ல் அடுத்து இந்த கேரக்டரோட ரிவீல்தான்" - இயக்குநர் குமரன்

2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சின்னத்திரை விருது விழாவில், `சிறகடிக்க ஆசை’ இயக்குநர் குமரனுக்குச் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.விருதை திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் வழங்க, குமரன் அதைப் பெற... மேலும் பார்க்க

Vikatan Tele Awards 2024: "Jailer 2ல நான் இருக்கேனான்னு நெல்சன் சார்ட்ட கேட்டதுக்கு" - வசந்த் ரவி

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் 'Heart Beat' தொடருக்கு 'Most Celebrated Series' விருது வழங்கப்பட்டது.... மேலும் பார்க்க

Vikatan Tele Awards 2024: "காந்தி, அண்ணா, MGR போல தலைவனாக உருவாக நினைக்கும் விஜய்" - SA சந்திரசேகர்

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகை வடிவுக்கரசி அவர்களுக்கு 'Evergreen Star of Tamil Television' வி... மேலும் பார்க்க