Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
Vikatan Tele Awards 2024: "படப்பிடிப்பில்தான் பால் டப்பா யார் என்று தெரிந்தது" - விஜய் மில்டன்
சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது.
இதில் 'கயல்' தொடரில் நடித்துவரும் 'வழக்கு எண் 18/9' முத்துராமனுக்கு 2024-ம் ஆண்டின் 'Best Actor - Negative Role' என்ற விருதை 'கோலி சோடா', 'மழைப்பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் கொடுத்துச் சிறப்பித்தார்.

முத்துராமன்
"'வழக்கு எண் 18/9’ படத்துல விஜய் மில்டன் சார்தான் கேமராமேன். அந்தப் படத்துல நடிச்சதுக்காக `சிறந்த வில்லனுக்கான விகடன் சினிமா விருதை’ பெற்றேன். இப்போது சின்னத்திரையில் `சிறந்த வில்லனுக்கான விகடன் விருதை’ வாங்கியிருக்கிறேன். என் வாழ்க்கையில் விகடன் சிறந்த தருணங்களைக் கொடுத்திருக்கிறது, அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது" என்று உணர்ச்சிவசப்பட்டார்.
விருதை வழங்கிய இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது, "`வழக்கு எண் 18/9’ படத்துக்காக நல்ல வில்லன் நடிகரை ரொம்பத் தேடி அலைந்தோம். இவர்தான் வில்லன் என்று கண்டுபிடித்துவிடக் கூடாத வில்லன் கதாபாத்திரம் அது.
அதற்குச் சரியான ஆள் முத்துராமன் சார்தான் என்று கடைசியில்தான் தெரிந்தது. அவர் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் நண்பரும்கூட. அவரது கதாபாத்திரம் இவ்வளவு பாராட்டுகளைப் பெறுவதற்கு மிக முக்கியமான காரணம் பாலாஜி சக்திவேல் சார்’’ என்றார்.

ரேப் இசை பாடகர் பால் டப்பா விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார்.
இது குறித்துப் பேசிய விஜய் மில்டன், ``பால் டப்பாவை என் படத்தில் நடிக்கிறார். நான் புக் பண்ணும்போது அவர் யாருன்னே தெரியாது. அவர் பாடல் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை.
ஷூட்டிங்கில் அவருடன் வேலை செய்யும்போதுதான் அவர்கிட்ட நிறைய திறமை இருக்குன்னு தெரிஞ்சுது. இப்போ ‘DUDE’ படத்தில் ‘Oorum Blood’ பாடல் பெரிய ஹிட் அடிச்சிருக்கு. இன்னும் பல உயரங்களுக்குப் போவார் பால் டப்பா’’ என்றார்.