Bison: ``தோல்வியடைந்துவிட்டால் ஊருக்கு வரமாட்டேன் எனச் சொன்னேன்!" - வைரலாகும் ரா...
Vishal: ``விருதை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன்!" - விஷால்
விஷால் நடித்து வரும் 'மகுடம்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தீபாவளி முடிந்து தொடங்கும் என அப்படத்தின் இயக்குநர் ரவி அரசு தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், தனது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நடிகர் விஷால் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்து வருகிறார்.

'Unfiltered Side of Vishal' என்கிற தலைப்பில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் விருதுகள் குறித்த அவருடைய பார்வையை அவர் விளக்கிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஷால் பேசுகையில், "எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விருதுகளெல்லாம் பைத்தியக்காரத்தனம். 4 பேர் உட்கார்ந்து கொண்டு 7 கோடி மக்களுக்கு பிடித்த விஷயங்கள் சொல்வதற்கு அவர்கள் என்ன மேதாவிகளா?
இதில் நான் தேசிய விருதையும் சேர்த்துதான் சொல்கிறேன். தேசிய விருதுகளுக்கு கமிட்டி இருக்கிறது. ஆனால், மக்கள் சர்வே எடுக்க வேண்டும். நான் விருது வாங்கவில்லை என்பதனால் இதைச் சொல்லவில்லை.

எனக்கு விருது கொடுப்பதற்கு அறிவித்தால், நான் இந்த விருதை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன். ஒரு வேளை அது தங்கமாக இருந்தால் அதை விற்று அன்னதானத்திற்கு கொடுத்துவிடுவேன்.
எனக்கு விருது கொடுத்துவிடாதீர்கள். அதற்குத் தகுதியான மற்ற சிறந்த கலைஞர்களுக்கு கொடுங்கள் எனச் சொல்லிவிடுவேன்," எனக் கூறியிருக்கிறார்.