செய்திகள் :

தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் ராமாயணத்தை விளக்கும் ட்ரோன் ஷோ

post image

டெல்லி கடமை பாதையில் 1.51 லட்சம் மண் விளக்குகள் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம். வழக்கமாக டெல்லியில் மாசைக் கட்டுபடுத்தவும், பட்டாசு வெடிப்பதை குறைக்கவும் பல இடங்களில் லேசர் ஷோ நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்றும் இன்றும் டெல்லியின் பல இடங்களில் லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று கடமை பாதையில் இந்தியா கேட் வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் 1.51 லட்சம் மண் விளக்குகள் ஏற்றி தீபாவளியைக் கொண்டாடினர். மேலும் இந்த நிகழ்வில், ராமாயணத்தை மையமாகக்கொண்ட ஒரு பிரமாண்டமான ட்ரோன் மற்றும் லேசர் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.

லைட் ஷோ

டெல்லியின் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் காற்று மாசுபாடு அளவு 0 முதல் 50 வரை நல்ல முறையிலும், நவம்பர் மாதத்திற்குப் பிறகு சில நேரங்களில் காற்று மாசுபாடு அளவு 400 ஐ தாண்டும் இதனால் டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் தீபாவளி முதல் ஆங்கில புத்தாண்டு வரை பட்டாசுகள் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்படும். இதற்காக மக்களை உற்சாகப்படுத்த டெல்லியின் முக்கிய பகுதிகளில் லேசர் மட்டும் ட்ரோன் ஷோ நடத்தப்படும்.

இதனுடன் இந்த ஆண்டு நேரக் கட்டுப்பாடுகளுடன் பசுமை பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இருந்தும் இந்த ஆண்டு டெல்லியில் லேசர் மட்டும் ட்ரோன் ஷோ நடத்தப்படுகிறது.

ட்ரோன் ஷோ

அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை டெல்லி கடமை பாதையில் ராமாயணத்தின் முக்கிய அத்தியாயங்களை சித்தரிக்கும் பெரிய அளவிலான ட்ரோன் ஷோ நடைபெற்றது. இதில் ராமர் அயோத்தி திரும்பும் கதையை விவரிக்கும் விதமாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாரம்பரியத்தை புதுமையுடன் கலந்தது ட்ரோன் ஷோ நடைபெற்றது. இந்த ட்ரோன் ஷோ மற்றும் கலாசார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ரசித்தனர்..

Diwali Shopping: `பட்டாசு, புத்தாடை...' கடை வீதிகளில் களைகட்டும் ஷாப்பிங் | Photo Album

தீபாவளி ஷாப்பிங் தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி ஷாப்பிங்தீபாவளி... மேலும் பார்க்க

Diwali: `வானில் வண்ணங்கள்' ராமாயண ட்ரோன் ஷோ | Photo Album

ட்ரோன் ஷோட்ரோன் ஷோட்ரோன் ஷோட்ரோன் ஷோட்ரோன் ஷோட்ரோன் ஷோட்ரோன் ஷோட்ரோன் ஷோட்ரோன் ஷோட்ரோன் ஷோ மேலும் பார்க்க

No Marriage: 'கென்ஸ்' இருந்தால் போதும், கணவர் வேண்டாம் - சீனாவில் வைரலாகும் வினோத டிரெண்ட்!

திருமணம் என்ற கலாச்சாரம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது இருக்கும் தலைமுறையினர்கள் தங்கள் சொந்த விருப்பங்களுக்கும், சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர... மேலும் பார்க்க

போலாந்து: 15 வயதில் மகளைப் பூட்டி வைத்த பெற்றோர்; 42 வயதில் காவலர்களால் மீட்கப்பட்டது எப்படி?

போலாந்து நாட்டில் 15 வயது மகளை, பெற்றோர் 27 ஆண்டுகளாக ஒரு சிறிய அறைக்குள் பூட்டி வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நடக்கக் கூட முடியாத நிலையில் 42 வயதில் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.போலாந்தீன் ஸ்விட... மேலும் பார்க்க