Bison: ``தோல்வியடைந்துவிட்டால் ஊருக்கு வரமாட்டேன் எனச் சொன்னேன்!" - வைரலாகும் ரா...
"அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல" - திருப்பாச்சி நடிகை மல்லிகா
'திருப்பாச்சி' திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மல்லிகா விஜய் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெயிட்டிருக்கும் வீடியோவில், " இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணாலே விஜய் சார் பத்தி தான் வீடியோலாம் வருது.

அவருக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணி பேசிருக்காங்க. நானும் அவரைப் பத்தி பேசணும்'னு நினைக்கிறேன். படப்பிடிப்பில் எல்லாம் ரொம்ப அமைதியா இருப்பாரு.
எப்படி கட்சி ஆரம்பிப்பாருன்'னு நினைச்சேன். ஆனால் மக்கள் கிட்ட பேசும்போது அவர் கிட்ட நிறைய மாற்றம் தெரிஞ்சது. அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல. நல்லது செய்ய வந்தால் தப்பா சில விஷயம் நடக்கும் ஆனா, கடைசியில அவர் தான் ஜெயிப்பார்.
கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க அண்ணா" என்று விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.