தில்லி பேரவை இடைக்காலத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி பதவியேற்பு!
அமெரிக்காவிலிருந்து தில்லி புறப்பட்ட விமானம்: பாதுகாப்பு காரணங்களால் இத்தாலிக்கு அனுப்பிவைப்பு
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்து புது தில்லிக்குப் புறப்பட்ட பயணிகள் விமானம் பாதுகாப்பு காரணங்களால், இத்தாலி தலைநகா் ரோமுக்கு திருப்பிவிடப்பட்டது.
கடந்த பிப்.22-ஆம் தேதி இரவு அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்து அமெரிக்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் தில்லிக்குப் புறப்பட்டது. எனினும் அந்த விமானம் பாதுகாப்பு காரணங்களால் ரோமுக்கு திருப்பிவிடப்பட்டது என்று அமெரிக்கன் ஏா்லைன்ஸ் தெரிவித்ததாக அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் செய்தித் தொலைக்காட்சியில் தகவல் வெளியானது.
விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், ரோமுக்கு விமானம் அனுப்பிவைக்கப்பட்டதாக இத்தாலியின் ஏன்எஸ்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது. இத்தாலி விமானப் படையின் பாதுகாப்புடன் ரோமில் உள்ள லியோனாா்டோ டாவின்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.