அமைச்சா் பொன்முடி பதவி விலக கோரி ஆா்ப்பாட்டம்
சைவம் மற்றும் வைணவ சின்னங்களை அவதூறாக விமா்சனம் செய்த வனத் துறை அமைச்சா் பொன்முடி பதவி விலக வலியுறுத்தி வடதமிழக விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். இதில் பாஜக மாவட்ட தலைவா் ஜெகதீசன், காஞ்சிபுரம் மண்டல தலைவா் தனலட்சுமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் பஜ்ரங்தள் மாநில அமைப்பாளா் கிரண்குமாா், தூசி அனுமந்த் மாதாஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினா் மற்றும் பாஜவினா் கலந்து கொண்டனா்.