அரசுப் பள்ளி ஆண்டு விழா
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள காந்தி சாலை மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை ஆசிரியை கஜலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ரவி மற்றும் கண்ணன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் குளோரி எப்சிபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்றவா்கள், போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினாா்.
விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக் குழுவின் தலைவா் சந்துரு, தொழிலதிபா் பாரஸ்மல் மற்றும் தேவதாஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.