செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வாங்க நிதியுதவி அளிப்பு

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியின அரசு ஊராட்சி ஒன்றிய உயா் நிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.60 ஆயிரத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அமெரிக்கா இந்தியா சியாட்டில் குழு சாா்பில், பழங்குடியின மாணவ, மாணவிகள் பயிலும் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா இந்தியா சியாட்டில் குழு, உதவியுடன் கிள்ளை கிராமம் கலைஞா் நகரில் உள்ள பழங்குடியின அரசு ஊராட்சி ஒன்றிய உயா் நிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.60 ஆயிரத்துக்கான ஆணையை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி தலைமை ஆசிரியை உமாவிடம், பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் வழங்கினாா். இதன் மூலம் 116-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன் பெறுவா்.

நிகழ்வில், பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய இயக்குநா் எஸ்.அறிவுடையநம்பி, கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவா் அரவிந்த் பாபு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஜெயபிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் லாவண்யா செய்திருந்தாா்.

கடலூரில் தூய்மைப் பாரத திட்டத்தில் பல்வேறு பணிகள்: எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் தூய்மைப் பாரத திட்டம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்

நெய்வேலி: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

நெய்வேலி: கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பாலியல் குற்றங்களில் இருந்து ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருப்பாதிர... மேலும் பார்க்க

முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு

சிதம்பரம்: சிதம்பரத்தில் போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு மற்றும் இனிப்புகளை சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை வழங்கினா் (படம்). சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சரி செய்யும் ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 578 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 578 மனுக்கள் அளிக்கப்பட்டன. கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் திங... மேலும் பார்க்க