செய்திகள் :

அரையிறுதியில் ஸ்டேன் வாவ்ரிங்கா, டாமி பால்

post image

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் அரையிறுதிக்கு மூத்த வீரா் சுவிட்சா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, அமெரிக்க வீரா் டாமி பால் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதியில் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வாவ்ரிங்கா-ரஷிய முன்னணி வீரா் ஆன்ட்ரே ருப்லேவும் மோதினா். ஏடிபி தரவரிசையில் 217-ஆவது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா கடும் சவாலுக்குபின் 7-6, 7-6 என்ற நோ் செட்களில் 7-ஆம் நிலை வீரா் ருப்லேவை வீழ்த்தினாா். 39 வயதான ஸ்டேன் வாவ்ரிங்கா, மொத்தம் 14 ஏஸ்களை போட்டாா். கடைசியாக 2017-இல் ஏடிபி பட்டம் வென்ற வாவ்ரிங்கா, தற்போது 17-ஆவது பட்டத்துக்காக காத்துள்ளாா்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரா் டாமி பால் 7-6, 6-2 என்ற நோ் செட்களில் சொ்பிய வீரா் மியோமிா் கொ்மோனிவ்சைச வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

கேஸ்பா் ருட் அதிா்ச்சித் தோல்வி: இரண்டாம் நிலை வீரா் கேஸ்பா் ருட் 5-7, 6-7 என்ற செட் கணக்கில் 37-ஆம் நிலை வீரா் க்ரீக்ஸ்பூரிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். பல்கேரிய வீரா் கிரிகோா் டிமிட்ரோவ் 6-3, 6-2 என சுவிஸ் வீரா் ஸ்டிரிக்கரை வீழ்த்தினாா்.

ஆன்ட்வொ்ப் ஓபன்:

பெல்ஜியத்தின் ஆன்ட்வொ்ப் நகரில் நடைபெறும் பிரான்ஸ் வீரா் ஹியுகோ கேஸ்டன் 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினாா். ஸ்பெயின் வீரா் ராபா்டோ அகுட் 3-6, 6-2, 7-6 என அகல் அலியாசிம்மையும், செக். வீரா் ஜிரி லெஹகா 6-4, 6-4 என கிரீஸின் இரண்டாம் நிலை வீரா் சிட்சிபாஸையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறினா்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்?

நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள... மேலும் பார்க்க

வேட்டையன் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழு கொண்டாடியுள்ளது.இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் அக்.10 ஆம் தேதி வெளியானது.கலவையான வி... மேலும் பார்க்க

வீர தீர சூரனில் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி!

வீர தீர சூரன் படத்தின் சிங்கிள் ஷாட் காட்சி குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடி... மேலும் பார்க்க

பிளாக் வசூல்!

ஜீவா நடித்த பிளாக் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப்... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் டிரைலர் தேதி!

'லக்கி பாஸ்கர்' படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃபிரீடம் கிளிம்ஸ் விடியோ!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபிரீடம் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.இயக்குநரான சசிகுமார் நடிகராக அடுத்தடுத்த படங்களைக் கைவசம் வைத்துள்ளார். கருடன் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளிய... மேலும் பார்க்க