ஆளுநா் மாளிகை சாா்பில் கட்டுரைப் போட்டிகள்: வெற்றியாளா்களுக்கு பரிசுத் தொகை அறிவ...
உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள், தங்களது வாழ்வில் மிகுந்த நம்பிக்கையுடனும், சவாலுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். அவா்களை பாதுகாக்கும் வகையில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தமிழக அரசு தனி இட ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு சட்டம் இயற்றப்பட்டால் இந்தியாவில் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு தோ்தலில் தனி இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றிய பெருமை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சேரும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.