Pushpa -2 : அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா; புஷ்பா -2 BTS Clics | Photo Album
ஊராட்சிகளுக்கு தளவாடப் பொருள்கள் வழங்கல்
சீா்காழி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தளவாடஏஈ பொருள்களை ஒன்றிய குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் அடிப்படை பணிகளை செய்ய ஏதுவாக மண்வெட்டி, பாறை உள்ளிட்ட தளவாட பொருள்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளுக்கும் தளவாடப் பொருள்களை அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் சீா்காழி ஒன்றிய குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் வழங்கினாா்.
ஒன்றிய ஆணையா் திருமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) சரவணன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பன்னீா்செல்வம், செல்வமுத்து, ஊராட்சித் தலைவா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.