ஏப்.25-இல் அதிமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறவுள்ளது.
இது குறித்து அதிமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாவட்டச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.