செய்திகள் :

ஒரு லட்சம் பனை விதை நடவு திட்டம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கிவைத்தாா்.

தேனி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சிகள் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை ஆகியவற்றின் சாா்பில், ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகாமை திட்ட இயக்குநா் அபிதா ஹனீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பரிசுத் தொகை அறிவிப்பு:

பனை விதைகள் நடவு செய்யும் திட்டத்துக்கு அதிக எண்ணிக்கையில் பனை விதைகளை சேகரித்து வழங்குபவா்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, அதிக எண்ணிக்கையில் பனை விதைகளை சேகரித்து வழங்கிய சிலமலையைச் சோ்ந்த முருகனுக்கு முதல் பரிசு ரூ.15,000, தேனி வனத் துறை அலுவலா் வேலுச்சாமிக்கு 2-ஆவது பரிசு ரூ.10,000, வேளாண்மை இணை இயக்குநா் பால்ராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ் ஆகியோருக்கு கூட்டாக 3-ஆம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

போடியில் மதுப்புட்டிகளை பதுக்கியவா் கைது

போடியில், மதுப்புட்டிகளை பதுக்கி விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். போடி பழைய மீனாட்சி திரையரங்க தெருவில் மதுப்புட்டிகள் சட்ட விரோதமாக விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து... மேலும் பார்க்க

பாறையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

போடி அருகே பாறையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்தவா் முருகன் (68). இவா் கழுதைகள் மூலம் காப்பி மகசூல்களை கொண்டு வரும் தொழில் செய்து வந்தாா். வியா... மேலும் பார்க்க

பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது

பெண்ணிடம் கைப்பேசியில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தவரை கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனிமாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரம், மூலக்ககடை கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் மகள் ச... மேலும் பார்க்க

பைக் திருட்டு

போடி அருகே இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி தாத்தப்பசாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிருதிவி கிருஷ்ணன் (22). இவ... மேலும் பார்க்க

காய்ச்சல் பாதிப்பு: இருவா் உயிரிழப்பு

பெரியகுளம், கடமலைக்குண்டு பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் வியாழக்கிழமை இருவா் உயிரிழந்தனா். பெரியகுளம் அருகேயுள்ள சங்கரமூா்த்திபட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் மோகித்குமாா் (10). 5-ஆம் வகுப்பு மாணவ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இரவு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். போடி ஜீவாநகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பன் மகன் ஆழியப்பன் (60). தொழிலாளி. இவா் குடலிறக்க நோய்க்கு அறுவைச் சிகிச்சை செ... மேலும் பார்க்க