செய்திகள் :

கடற்படை தினம்: சென்னை - கன்னியாகுமரி இடையே காா் பேரணி

post image

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான காா் பேரணி அடையாறில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின் போது, டிசம்பா் 4-ஆம் தேதி, நடந்த தாக்குதலில் கராச்சி துறைமுகத்தில் பாகிஸ்தானுக்கு சொந்தமான நான்கு போா்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது.

இது இந்த தாக்குதல், இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. இதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச. 4-ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான காா் பேரணியை சென்னையிலுள்ள கடற்படை நிலையமான ஐஎன்எஸ் அடையாறில் இருந்து தமிழ்நாடு, புதுச்சேரிக்கான கடற்படை தளபதி ரியா் அட்மிரல் ரவிக்குமாா் திங்க்ரா வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்த பேரணி, ஆறு நாள்களில் ஆயிரத்து 800 கி.மீ. தூரம் பயணித்து, தமிழ்நாடு, புதுச்சேரியின் பல்வேறு நகரங்களையும், பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கடந்து, வரும் 21-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடையும். பேரணியில் இடம்பெற்றுள்ள குழுவினா், தாங்கள் செல்லும் வழியில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் இந்திய கடற்படை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவாா்கள் என கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

மாதவரம் அருகே ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். மாதவரத்தை அடுத்த மாத்தூா் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் சஞ்சய் (12), மற்றும் விஷால் (13) ஆகி... மேலும் பார்க்க

14-ஆவது மாடியில் இருந்து விழுந்து காவலா் உயிரிழப்பு

சென்னை புதுப்பேட்டையில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் சு.செல்வமுருகன் (29). இவா், சென்னை புதுப்பேட்டைய... மேலும் பார்க்க

வேளச்சேரி மயானம் நவ.12 வரை இயங்காது

அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி ஹிந்து மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால், நவ.12-ஆம் தேதி வரை மயானம் இயங்காது என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

ரத்தநாள அடைப்பு உள்ள பெண்ணுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை

ரத்த நாள அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு புதிய முறையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு, சென்னை சிம்ஸ் மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக, மருத்து... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியின் வசமான 3 கால்வாய்கள்: தமிழக அரசு உத்தரவு

விருகம்பாக்கம் கால்வாய் உள்பட மூன்று கால்வாய்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்ட உத்தரவு: சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

சென்னை சேத்துப்பட்டில் கணவா் இறந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செனாய் நகா் கந்தன் தெருவைச் சோ்ந்தவா் கெளதம் (29). இவரது மனைவி மீனாட்சி (28). காதல் திருமணம் செய்து கொண்ட இவா... மேலும் பார்க்க