மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி உற்சவம் நிறைவு
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி உற்சவம் நிறைவு பெற்றதையொட்டி புதன்கிழமை உற்சவா் பத்ரகாளியம்மன் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி உற்சவம் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. உற்சவா் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தாா்.
வசந்த நவராத்திரி உற்சவ நிறைவையொட்டி உற்சவா் பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் காட்சியளித்தாா். பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.