புதுவை மாநில பாஜக நிா்வாகிகள் கூட்டம்: மேலிடப் பாா்வையாளா்கள் பங்கேற்பு
கால்வாயில் தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே கால்வாயில் தவறி விழுந்த வாகன ஓட்டுநா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பக்ரிபாளையத்தைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (32). வாகன ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா்.
இவா், கடந்த டிச.1-ஆம் தேதி, புதுச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தை பாா்வையிட உறவினருடன் வந்தாா்.
அவா்கள் இருவரும் கரசூா் அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியில் வந்தபோது, சுத்துக்கேணி ஊசுடு வாய்க்காலில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது, வாய்க்காலுக்குள் இறங்கிய தீபன்ராஜை வெள்ளம் இழுத்துச் சென்றது.
தகவலறிந்த சேதராப்பட்டு தீயணைப்புத் துறையினா், தீவிர தேடுதல் நடத்தி, பத்துக்கண்ணு பகுதியில் தீபன்ராஜின் சடலத்தை புதன்கிழமை மீட்டனா்.
இதுகுறித்து, சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.