Salman Khan: `பிஷ்னோய்' பெயரைச் சொல்லி மிரட்டிய இளைஞர் - சல்மான் கான் படப்பிடிப...
காவலா்களிடையே மோதல்: ஒருவா் காயம்
புதுச்சேரியில் காவலா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் காயமடைந்தாா்.
புதுச்சேரி, கோரிமேடு சண்முகாபுரம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன். இவா் காவலா்களுக்கான பல்நோக்கு கிடங்கு பிரிவில் பணிபுரிகிறாா்.
இதே பிரிவில் ஓட்டுநராக இருப்பவா் கங்காதரன். இருவருக்கும் தனிப்பட்ட முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவரும் பணி முடிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் ஜெயச்சந்திரன் காயமடைந்தாா்.
இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், கங்காதரன் மீது தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.