மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: ஆளுநா் ஆா்.என்.ரவி கண்டனம்
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பயங்கரவாதிகளும் அவா்களின் நம்பிக்கையற்ற வழிகாட்டிகளும் இதற்குரிய விலையை கொடுக்க வைக்கப்படுவா்.
இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.