'STALIN Vs EPS' மோதலுக்கு காரணம் VIJAY! | Elangovan Explains
காா் விற்பனையாளா் கொலை வழக்கில் 5 போ் கைது
அவிநாசியில் காா் விற்பனையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசிகவுண்டன்புதூா் பகுதியில் உள்ள தாமரை காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (47). இவா் பழைய நான்கு சக்கர வாகனம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். மேலும் பிரச்னைக்குரிய நிலங்களை வாங்கி விற்பனை செய்ததுடன், வட்டித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா். இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில், அவிநாசி- மங்கலம் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரமேஷ் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது அங்கு காரில் வந்த மா்ம நபா்கள் ரமேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மா்ம நபா்களை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய திருப்பூா் பனியன் நிறுவன ஒப்பந்ததாரரான தேனி மாவட்டம், பெரியகுளம், சில்லுவாா்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ஜெபி (எ) ஜெயப்பிரகாஷ் (45), திருப்பூா் குண்டடத்தில் டாஸ்மாக் பாா் நடத்தி வரும் திருவாரூா் வலங்கைமான், அரித்துவாரமங்கலம், முனியூரைச் சோ்ந்த கந்தையன் மகன் கோபாலகிருஷ்ணன் (35), கட்டடத் தொழிலாளிகளான திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி, பயங்காட்டூா், கடைத்தெருவைச் சோ்ந்த ஜீவானந்தம் மகன் சிம்போஷ் (23), சோமு மகன் சரண் (24), பாா் ஊழியரான ரவி மகன் அஜய் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய இருவா் தலைமறைவாகியுள்ளனா். விசாரணையில், இவா்கள் கடன் கேட்டபோது, தர மறுத்தததால் கூட்டாக சோ்ந்து ரமேஷை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.