2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!
``குறைகளை ஏன் கவனிக்க மறுக்கிறீர்கள் நிதின் கட்கரி சார்?" - டீசல் பட இயக்குநரின் ஆதங்கப் பதிவு
ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது கொண்டிருந்தது.
இந்தப் பேருந்தில் 40 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3.30 மணியளவில் ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை 44-ல் பேருந்து வேகமாகச் சென்று பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றியது. ஏசி பஸ் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்திலிருந்து தப்பிக்கக் கூட வழியில்லாமல் பேருந்தில் சிக்கியிருக்கின்றனர்.

சிலர் ஜன்னலை உடைத்து உயிர் தப்பிய நிலையில், இதுவரை 20 பயணிகள் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருக்கும் ரமேஷ் என்பவரின் புகாரின் அடிப்படையில், வேகமாக பேருந்தை இயக்கிய டிரைவர்கள் இருவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், டீசல் பட இயக்குநர் சண்முகம் முத்துசாமி,, தன் எக்ஸ் பக்கத்தில், ``நெடுஞ்சாலைகளில், இருசக்கர வாகன ஓட்டிகள் மிக மோசமாக சாலைவிதியை பின்பற்றாமல், வாகனங்களை இயக்குவது குறித்து கடந்த 3 ஆண்டுகளாக பல பதிவுகளை நான் வெளியிட்டு வந்தேன்'' என்றார்.
என்போன்ற பலரின் பதிவுகளையும் கண்டேன். ஆனால் அரசு, அதுகுறித்து கவனம் செலுத்தாமல் விட்டதன் விளைவு, இவ்வளவு உயிர் பலியாகி இருக்கிறது.

மக்கள் சுட்டிக்காட்டும் குறைகளை ஏன் கவனிக்க மறுத்து விடுகிறீர்கள் நெடுச்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சார்? போர்க்கால அடிப்படையில் புதிய சாலை விதிகளை உருவாக்கி அதை பின்பற்ற வேண்டுகிறேன்.
ஹைதராபாத் பெங்களூரு சாலை தனியார் பேருந்து விபத்தில் பலியான அனைவரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். ஓம் சாந்தி" எனப் பதிவிட்டுள்ளார்.













