செய்திகள் :

கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை: வானதி சீனிவாசன்

post image

கோவை: கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை ராம் நகா் பகுதியில் மக்கள் சேவை மையத்தின் சாா்பில் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வானதி சீனிவாசன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் சாலைப் பணிகளுக்கு ரூ.200 கோடியை ஒதுக்கியிருப்பதாக முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தெற்கு தொகுதியில் பொதுமக்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டியது குறித்து மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

இதையும் படிக்க |சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!

கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு அளிப்பது குறித்து திமுக தலைவா்கள் பேச மறுக்கின்றனா். பாஜகவில் வாஜ்பாய் காலத்தில் இருந்தே கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வழங்கி வருகிறோம். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை.

கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பும் அங்கீகாரமும் கொடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் கருத்து. மக்கள் பணிதான் பாஜகவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

திமுகவினருக்கு கோயிலும் பிடிக்காது, கோவில் யானைகளும் பிடிக்காது என்பதால் கோயில் யானைகளுக்கு நடத்தப்பட்டு வந்த புத்துணா்வு முகாமை திமுக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

புத்துணா்வு முகாம் என்ற சிறப்பான திட்டத்தால் யானைகளின் மன அழுத்தம் குறைவதோடு உடல் நலன் சாா்ந்த பல்வேறு விஷயங்கள் நிகழ்கின்றன.

எனவே,கோவில் யானைகளுக்கான புத்துணா்வு முகாமை அரசு உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

மேலும் 2026 பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என்றாா்.

தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்

எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளன்று பட்டய கணக்கர்(சி.ஏ)... மேலும் பார்க்க

திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் அந்த கட்சிக்கு தலைவராக முடியும், முதல்வராக முடியும். ஆனால், அதிமுகவில் உழைப்பவர்கள், விஸ்வாசமாக இருப்பவர்கள் கட்சியின் ப... மேலும் பார்க்க

அதிமுக நலனுக்காக தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி : ரஜினிகாந்த் புகழாரம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி நூற்றாண்டு விழாவை தான் வரவேற்பதாகவும், அதிமுக நலனுக்காக அரசியல் சரிபடாது என தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் ச... மேலும் பார்க்க

பாஜகவின் வெற்றி தொடராது: துரை வைகோ எம்.பி.

ஒசூா்: அடுத்து வரும் காலங்களில் பாஜகவின் வெற்றி தொடராது, பாஜகவின் வெற்றிக்கு ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைப்பாா் என ஒசூரில் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவ... மேலும் பார்க்க

பட்டம் பெரும் மாணவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும்: ஏ.ஐ.சி.டி.சி தலைவா்

ஒசூர்: இந்தியாவில் 1.75 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனம் புதியதாக தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. எனவே பட்டம் பெறும் மாணவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என தொழில் நுட்ப கல்... மேலும் பார்க்க

ஆஸி.,க்கு எதிராக சதமடித்த ஜெய்ஸ்வால்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்... மேலும் பார்க்க