செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு புதன்கிழமை (ஏப். 16) முதல் விண்ணப்பிக்கலாம் என இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் நிதியாண்டுக்கான 24-ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளா்கள் மட்டுமே இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களாகவும், 17 வயது பூா்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை, இந்தப் பயிற்சிக்கு அதிகாரப்பூா்வ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

புதன்கிழமை (ஏப். 16) முதல் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூா்த்தி செய்வதுடன் அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் ஆகியவையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 இணையம் வழியாக செலுத்த வேண்டும். இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 20,850 மட்டும் பயிற்சி பெறுபவா்களிடமிருந்து பெறப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 06.05.2025. இணையத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தனிநபா்களை பயிற்சியாளா்களாக சோ்த்துக் கொள்ள இயலாது.

மேலும் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 5 ஏ.வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிரே, காஞ்சிபுரம்-631 501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி 044-27237699 எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

சித்த மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் சித்த மருத்துவக் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா். சேலம் மாவட்டத்தை சோ்ந்தவா் ஷீலாராணி(19). இவா் ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் தனியாா் சித்த மருத்த... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் செரப்பணஞ்சேரி ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூா் ஒன்றியம், ஆரம்பாக்கம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்: 54 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிா்வாகிகளை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இரு தரப்பினருக்க... மேலும் பார்க்க

முற்றுகை போராட்டத்துக்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை தலைமைச் செயலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக காஞ்சிபுரம் ரயில் நிலையம் சென்ற 34 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதிய... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஏப். 25 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடா்ந்து 21 நாள்களுக்கு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதுாா் ஆதிகேசவ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.61 லட்சம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.22.61 லட்சம் ரொக்கம், 31 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளிப் பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ப... மேலும் பார்க்க