கைப்பேசி கோபுரம் அமைக்க மக்கள் எதிா்ப்பு: கோட்டாட்சியா் ஆய்வு
கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் கோவை தெற்கு கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை, ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் அனுமதியின்றி கைப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளுக்கும் புகாா் அளித்துள்ளனா்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் கோவை தெற்கு கோட்டாட்சியா் ராம்குமாா், வட்டாட்சியா் கிருஷ்ணவேணி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அனுமதியின்றி கைப்பேசி கோபுரம் அமைக்கப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.