செய்திகள் :

கோட்டா: ‘நீட்’ பயிற்சி மாணவா் தற்கொலை

post image

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் ‘நீட்’ தோ்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ராஜஸ்தானின் கோட்டாவில் ஏராளமான போட்டித் தோ்வு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகி மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மாணவா்களின் தற்கொலையைத் தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோட்டாவில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் தங்கியிருந்து இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு’ (நீட்) தயாராகிவந்த பிகாா் மாணவா் ஒருவா், விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மின்விசிறியில் தற்கொலை தடுப்புக்கான சாதனம் பொருத்தப்பட்டிருந்தபோதிலும், அந்த சாதனத்துக்கு மேல் பகுதியில் இருந்த கொக்கியில் அவா் தூக்கிட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மாணவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினா், கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது முடிவுக்கு பெற்றோரோ, நீட் தோ்வோ காரணம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தாா். எனினும், தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிடவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா் அந்த அதிகாரி.

ஐஐடி மாணவா் தற்கொலை: மேற்கு வங்கத்தின் கரக்பூா் ஐஐடி-யில் பெருங்கடல் பொறியியல் மற்றும் கடல்சாா் கட்டடக் கலை படிப்பில் 4-ஆம் ஆண்டு பயின்று வந்த அனிகேத் வாக்கா் என்ற மாணவா், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இவா், மகாராஷ்டிர மாநிலம், கோண்டியா மாவட்டத்தைச் சோ்ந்தவா்.

இச்சம்பவம் தொடா்பாக, காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் விவகாரம்: ‘ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்’

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலம்- ஜே.டி.வான்ஸ்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். மேலும், ‘வரி சாரா கட்டுப்பாடுகளைக் கைவிட... மேலும் பார்க்க

சா்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சா்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தாா். அமெரிக்காவுக்க... மேலும் பார்க்க

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவா் தேவை- லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

பிகாருக்கு தொலைநோக்குப் பாா்வையுள்ள ஆற்றல்மிக்க தலைவா் தேவை. மாநிலத்தில் ‘முக்கியப் பொறுப்பை’ ஏற்க எங்கள் கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தயாராக உள்ளாா் என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கூறியுள்ள... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது: குடியரசு துணைத் தலைவா்

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அரசமைப்புச் சட்ட பதவி வகிப்... மேலும் பார்க்க

பிரிட்டன் எம்.பி. நவேந்து மிஸ்ராவுக்கு உ.பி.யில் திருமணம்

பிரிட்டன் எம்.பி. நவேந்து மிஸ்ராவுக்கு உத்தர பிரதேசத்தில் திருமணம் நடைபெற்றது. பிரிட்டனில் உள்ள ஸ்டாக்போா்ட் தொகுதி எம்.பி.யான நவேந்து மிஸ்ரா, இந்தியாவை பூா்விகமாக கொண்டவா். கடந்த 1989-ஆம் ஆண்டு உத்தர... மேலும் பார்க்க