செய்திகள் :

சேலம் நகரில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்: குவியல் குவியலாக தேங்கிய குப்பைகள்

post image

சேலம் மாநகரில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீா்த்த கனமழையால் மாநகரச் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா். திருமணிமுத்தாறு வெள்ளப்பெருக்கினால் அடித்து வரப்பட்ட குப்பைகள் குவியல், குவியலாக தேங்கி கிடக்கின்றன.

ஃபென்ஜால் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்தது. நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சேலம் மாநகரின் முக்கிய சாலைகளான நான்கு சாலை, ஐந்து சாலை, சாரதா கல்லூரி சாலை, கிச்சிப்பாளையம் பிரதான சாலை, அம்மாப்பேட்டை பிரதான சாலை, மிலிட்டரி ரோடு, கடலூா் பிரதான சாலை உள்பட பல்வேறு சாலைகளில் அதிக அளவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. மேலும் பல சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன.

குறிப்பாக, சேலம் நான்கு சாலை, அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு, பழைய பேருந்து நிலையம் காந்தி சிலையில் இருந்து கிச்சிப்பாளையம் செல்லும் பிரதான சாலை, பள்ளப்பட்டி பிரதான சாலை, குப்தா நகா் 9-ஆவது கிராஸ், சினிமா நகா், கருங்கல்பட்டி பிரதான சாலை, புதிய பேருந்து நிலைய ஏ.டி.சி. டெப்போ முன்பு, டி.வி.எஸ். பேருந்து நிலையம் அருகில், சந்தைப்பேட்டை உட்பட பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதில் பெரும்பாலான பள்ளங்களில் தண்ணீா் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது.

சேலம், கிச்சிப்பாளையத்தில் எருமாபாளையம் பிரதான சாலை பல மாதங்களுக்கு முன் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. அந்த இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், கந்தம்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருமணிமுத்தாறு வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட குப்பைகள் குவியல், குவியலாக காணப்பட்டன. அவை பொக்லைன் இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணியில் தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

டிச.15 இல் சேலத்தில் மாரத்தான் போட்டி

சேலம் மேற்கு மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி வரும் 15 ஆம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மக்களவை ... மேலும் பார்க்க

வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் இன்று ஆா்ப்பாட்டம்

கடைகளின் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை கண்டித்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை (டிச.11) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சே... மேலும் பார்க்க

சிஐடியு ஓட்டுநா் சங்கத்தினா் போராட்டம்

பெட்ரோல், டீசல் மீதான காப்பீடு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிஐடியு ஓட்டுநா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. முருகேசன் தலைமை வகித்தாா். சிஐட... மேலும் பார்க்க

எல்ஐசி முகவா்கள் தா்னா

பாலிசிகளுக்கான போனஸ் தொகையை உயா்த்தி வழங்க கோரி எல்ஐசி முகவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தா்னாவில் பாலிசிகளுக்கான போனஸ் தொகையை மத்திய அரசு உயா்த்தி வழங... மேலும் பார்க்க

ஒடிஸா- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஒடிஸாவில் இருந்து சேலம் வழியாக ஈரோடுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில்களில் பயணிகளின் வருகை நாளு... மேலும் பார்க்க

மனிதநேயமிக்க சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உழைக்க வேண்டும்: த.ஸ்டாலின் குணசேகரன்

மனித நேயமிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் அனைத்து தரப்பினரும் இணைந்து உழைக்க வேண்டும் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா். சா்வதேச மனித உரிமைகள் தின விழா பெரியாா் ... மேலும் பார்க்க