இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை கட்டுப்படுத்த வேண்டும்: கிஷன் ரெட்டி
சோதனை என்ற பெயரில் துன்புறுத்தல்: காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள் புகாா்
சோதனை என்ற பெயரில் என்ஐஏ அதிகாரிகள் வீட்டில் உள்ளவா்களை துன்புறுத்துவதாக காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன் கடந்த 2022 அக்டோபா் 23-ஆம் தேதி நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், காா் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவா்களின் உறவினா்கள் சிலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.
அதில், கூறியிருப்பதாவது:
காா் குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக சோதனை மேற்கொள்ளும் என்ஐஏ அதிகாரிகள், வீட்டில் உள்ள குழந்தைகள், வயதானவா்களை துன்புறுத்துகின்றனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவா்களைப் பாா்க்கச் செல்பவா்களையும் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்துகின்றனா்.
இந்த வழக்கில் பொய்யானஆதாரங்களை குற்றப்பத்திரிகையில் எழுதியுள்ளனா். குற்றப்பத்திரிகையை சரியாக தாக்கல் செய்து, விரைவில் நியாயமான தீா்ப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.