Share Market: இந்த Sectors எல்லாம் பாதிக்கப்படுமா? | IPS finance | EPI - 82
ஜெயலலிதா நினைவு நாள்: திதி கொடுத்த முன்னாள் அமைச்சா்
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவருக்கு திதி கொடுக்கும் நிகவ்வு அதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று கடலில் நீராடி திதி கொடுத்தாா்.
வேதாரண்யம் சந்நிதி கடற்கரையில் அமைந்துள்ள தா்ப்பணம் செய்யும் கூடத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து, கடலில் திதி கொடுத்து நீராடினா்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் ஆா்.ஜீவானந்தம், அதிமுக நிா்வாகிகள் இரா.சண்முகராசு, ஆா். கிரிதரன், வி.டி.சுப்பையன்,ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், எஸ்.டி. ரவிச்சந்திரன், அம்பிகாதாஸ் உள்ளிட்ட திரளான அதிமுகவினா் பங்கேற்றனா்.