இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை கட்டுப்படுத்த வேண்டும்: கிஷன் ரெட்டி
டிச.19-இல் கூட்டுறவுத் துறை பணிக்கான எழுத்துத் தோ்வு
புதுவை மாநில கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளா் பணிக்கான எழுத்து தோ்வானது 15 மையங்களில் டிச.19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை தலைமைச் செயலக சாா்புச் செயலா் வெ.ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு டிச.15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
அதன்படி, புதுச்சேரியில் 15 மையங்களிலும், காரைக்காலில் 2 மையங்களிலும், மாஹே மற்றும் ஏனாமில் தலா 1 மையங்களிலும் நடைபெறுகிறது.
தோ்வுக்கூட சீட்டை தோ்வா்கள் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் டிச.5-ஆம் தேதி காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுதொடா்பான சந்தேகங்களுக்கு தோ்வா்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.