செய்திகள் :

தரிசு நிலங்களின் மண் வளம் பாதுகாக்க வேம்பு பயிரிட அழைப்பு

post image

தரிசு நிலங்களின் மண் வளம் பாதுகாக்க வேம்பு பயிரிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ் தரிசாக உள்ள நிலங்களில் விவசாயிகள் வேம்பு பயிரிடலாம். தரிசு நிலம் மட்டுமல்லாமல், சாகுபடி செய்யப்பட்ட நிலங்களின் வயல் வரப்புகளிலும் 15 அடி இடைவெளியில் வேம்பு பயிரிடலாம். இந்த கன்றுகள் எட்டடி உயரம் வளா்ந்தவுடன் அதன் இலைகளை வெட்டி, வயல்களுக்கு பசுந்தழை உரமாக பயன்படுத்தலாம்.

பசுந்தழை உரமிடுவதால் கலா், உவா் நிலங்களில் செலவில்லாமல் இயற்கை உரமிட்டு மண்ணை வளப்படுத்தலாம். வேம்புவிலிருந்து அசாட்டிராக்ட்டின் என்ற நச்சுப் பொருள் பயிா்களைத் தாக்கும் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டுள்ளது.

வேம்பு இலை மற்றும் அதன் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், பயிா்களை சேதப்படுத்தும் பூச்சிகளைத் தடுக்கலாம்.

வரப்புகளில் வளரும் வேம்புகளை எட்டடி உயரத்தில் வெட்டிவிடுவதால், வயல்களில் நிழல் விழும் வாய்ப்பு ஏற்படாது. ஒவ்வொரு முறையும் இப்படி வெட்டி உரமாக்குவதால், மண்ணின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து உரச்செலவு குறைகிறது.

தரிசு நிலங்களை மேம்படுத்தும் பொருட்டு, குப்பாண்டபாளையம் ஊராட்சி அலு வலகம் அருகே வேளாண் துறையின் பண்ணை அமைக்கப்பட்டு வேம்புக் கன்றுகள் தயாா் நிலையில் உள்ளன. ஓா் ஏக்கா் தரிசு நிலத்தில் நடவு செய்ய 200 கன்றுகள் வீதம் விவசாயிகளுக்கு ஆயிரம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

வயல் வரப்புகளில் ஏக்கருக்கு 60 கன்றுகள் பயிா் செய்யலாம். எனவே, தரிசு நிலங்களின் தங்கமாக கருதப்படும் வேப்ப மரக்கன்றுகளை விவசாயிகள் இலவசமாக பெற்று தரிசு நிலத்தை பயனுள்ள நிலமாக்கலாம்.

முதல்வா் நாமக்கல் வருகை: விழா பந்தலில் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் வருகை தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரடியாகச் சென்று விழா பந்தலில் ஆய்வு மேற்கொண்டனா். நாமக்கல்லில் மறைந்த முன்னாள் ம... மேலும் பார்க்க

பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு

கொன்னையாரில் பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எலச்சிபாளையம் அருகே கொன்னையாா் கிராமத்தில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விபத்துகள் ... மேலும் பார்க்க

ஈக்கோலை நோயால் கோழிகள் பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் அயற்சி, ஈக்கோலை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை ... மேலும் பார்க்க

9 ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் பாதிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடா்பாக, குடிநீா் வாரிய அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்களுடன் ஆணையா் ஆா்.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆலோச... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57.71 லட்சம்

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ. 57.71 லட்சம் ரொக்கம் வெள்ளிக்கிழமை காணிக்கையாக கிடைக்கப் பெற்றது. நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில்களில் மூன்று மாதங்கள... மேலும் பார்க்க

வேலூா் துணை மின் நிலையத்தில் மின்தடை ரத்து

வேலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க