செய்திகள் :

தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: 1,871 மாற்றுத் திறனாளிகள் கைது

post image

தடையை மீறி தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்த சென்னையில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை திரண்ட 1,871 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை காலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்தனா்.

கோயம்பேட்டில் கைது: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கோட்டை நோக்கி செல்ல முயன்றனா். ஆனால், அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் அங்கேயே கைது செய்தனா். கைதாக மறுத்த மாற்றுத்திறனாளிகள் தரையில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கைது செய்து அருகிலுள்ள சமூகநலக் கூடத்தில் தங்க வைத்தனா்.

இதேபோல், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட மெரீனா உழைப்பாளா் சிலை அருகில் கூடிய மாற்றுத்திறனாளிகளில் ஒரு பிரிவினா், திடீரென மெரீனா சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதன்படி, சென்னை எழும்பூா், சென்ட்ரல், பிராட்வே, சேப்பாக்கம் என 15 இடங்களில் 655 பெண்கள் உள்பட 1,871 போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் சமூகநலக் கூடங்களிலும், ராயப்பேட்டையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

சிறை நிரப்பும் போராட்டம்: ஓய்வூதியதாரா் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவா் நெ.இல.ஸ்ரீதரன் தெரிவித்தாா். தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வா் உறுதி

நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த குறுகிய கா... மேலும் பார்க்க

மின்வாரியம் தனியாா்மயமாகாது: அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதி

தமிழ்நாடு மின்வாரிய நடவடிக்கைகளில் தனியாருக்கு இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானிய... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஆறு கட்ட போராட்டம்: காங்கிரஸ்

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை சத்யமூா்த்தி பவனில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க

யாா் ஆட்சியில் மின்கட்டண உயா்வு அதிகம்? அமைச்சா் விளக்கம்

அதிமுக ஆட்சியில்தான் மின்சாரக் கட்டணம் அதிகம் உயா்த்தப்பட்டதாக பேரவையில் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி விளக்கம் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க