Srilanka Parliament Election - தேர்தல் முறையும் கள நிலவரமும் | AKD | JVP | NPP
'திமுக கூட்டணியின் விரிசலுக்கு காத்திருக்கிறதா அதிமுக?' - உதயநிதி பேச்சுக்கு அதிமுக-வின் பதில் என்ன?
தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம்!
துணை முதல்வர் உதயநிதியின் விமர்சனம் குறித்து அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் பேசினோம், "உதயநிதி சொல்வதில் துளி கூட உண்மையில்லை. தற்போது தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் அவர்கள் சொல்வதுபோல கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு கூட்டணி கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி, வி.சி.க வரை அனைத்துமே தனிப்பட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகள். அவ்வளவு ஏன் காங்கிரஸ் கட்சியும் வேறு வழியில்லாது தேர்தல் அரசியலுக்காக தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் தி.மு.க மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. இப்போது எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வைத் தாண்டி கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களே ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதை நாம் கண்கூட பார்க்கிறோம்.
தமிழகத்தில் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்று தி.மு.க கூட்டணியில் இருக்கும் கே. பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியிருக்கிறார். தி.மு.க கூட்டணிக்குள் இருக்கும் குழப்பம் தெருவுக்கு வரத் தொடங்கிவிட்டது. உண்மையில் கூட்டணியின் தயவு இல்லாமல் தனித்து தி.மு.க-வால் ஒருபோதும் தேர்தலைச் சந்திக்க முடியாது. தி.மு.க கூட்டணியில் விரிசல் மட்டுமல்ல அந்த சுவர் உடைந்துகொண்டிருக்கிறது. அதை உடைத்துக்கொண்டிருப்பதும் தி.மு.க-தான். இந்த விவகாரத்தை மடைமாற்ற அ.தி.மு.க மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறார் உதயநிதி. கூட்டணிக் கட்சிகள் ஒன்றும் அறிவாலயத்தின் அடிமைகள் கிடையாது. தி.மு.க-வின் தோல்வி பயம் இப்போதே வெளிப்பட ஆரம்பித்துவிட்டது" என்றார் கோபமாக.
தி.மு.க கூட்டணியைப் பிரிக்க முடியாது!
அ.தி.மு.க-வின் கருத்து தொடர்பாக தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக்கிடம் பேசினோம், "அண்ணன் எப்போ..? வெளியேறு வார்.. திண்ணை எப்போது? காலியாகும் என்று நினைப்பில் வாழும் எடப்பாடி பழனிச்சாமியின் கனவு எக்காலத்திலும் பலிக்காது.. தி.மு.க கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றோம்... தி.மு.க கூட்டணியில்தான் தொடர்கின்றோம் என்று தோழர் திருமா தொடங்கி அனைத்து தோழமை கட்சியின் தலைவர்களும் மேடைக்கு மேடை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தபோதிலும், அ.தி.மு.க-வினர், தி.மு.க கூட்டணியில் விரிசல், புகைச்சல் என்று தொடர்ந்து பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், எப்படியாவது அந்த வலுவான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்திவிட முடியாத என்ற ஏக்கம்.
அப்படி யாராவது வெளியே வந்துவிட்டால் அவர்களை நம் கட்சி கூட்டணிக்குள் சேர்த்துவிடலாம் என்று ஆசையோடு துண்டை விரித்துக் காத்திருக்கிறார் எடப்பாடி. ஆனால், அவருக்கு மிஞ்சப்போவது என்னவோ ஏமாற்றம் மட்டுமே. அ.தி.மு.க கூட்டணியைப் போல ஓட்டுக்கு, சீட்டுக்குச் சேர்ந்த கூட்டணியாக இருந்திருந்தால் தேர்தல் முடிந்ததுமே கூட்டணி சிதறி காணாமல் போயிருக்கும். ஆனால், தி.மு.க கூட்டணி கொள்கை பிடிப்பால், மக்கள் நலனுக்காகச் சேர்ந்த கூட்டணி. இந்த கூட்டணியை அவ்வளவு எளிதில் யாராலும் பிரித்துவிட முடியாது. தலைவராகப் பொறுப்பேற்றது முதல் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறாதா எடப்பாடி தொடங்கி யார் என்ன நரித் தந்திரம் செய்தலும் தி.மு.க கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. தி.மு.க-வின் ஆட்சி இன்னும் ஒரு கால் நூற்றாண்டு தொடரும்" என்றார் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb