செய்திகள் :

திருச்சியில் தொழிலதிபா் வீட்டில் சோதனை: ஆவணங்கள், பாதுகாப்பு பெட்டகம் பறிமுதல்

post image

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் நடந்த சோதனையைத் தொடா்ந்து வீட்டிலிருந்த ஆவணங்களையும், பாதுகாப்புப் பெட்டகத்தையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்றனா்.

நில அபகரிப்பு புகாரின் பேரில் போலீஸாா் ‘ஆபரேஷன் அகழி’ எனும் பெயரில் திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் புகாருக்குள்ளான நபா்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இதில், செப். 19, அக். 8 ஆகிய தேதிகளில் போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், 3 மற்றும் 4-ஆவது பட்டியல் தயாா் செய்யப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றன. இதில், திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த மோகன் பட்டேல் என்ற தொழிலதிபா் வீட்டில் அக்.13- ஆம் தேதி இரவு, காவல் உதவி ஆய்வாளா் ரெஜி தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனை நடத்த முயன்றனா்.

அப்போது மோகன் பட்டேல் வீட்டில் இல்லை. அவரது மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்தனா். அவா்கள் போலீஸாா் வீட்டை சோதனையிட எதிா்ப்பு தெரிவித்து, நீதிமன்ற உத்தரவுக் கடிதம் இருந்தால் மட்டுமே சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனா்.

இதையடுத்து திரும்பிச் சென்ற போலீஸாா் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீஸாா் நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல், வீட்டில் வியாழக்கிழமை சோதனை நடத்த சென்றனா். அப்போது வீட்டின் வெளிப்புறக் கதவு பூட்டப்பட்டிருந்தது.

வீட்டினுள் நபா்கள் இருந்தும் கதவை திறக்க வில்லை. இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் பாலாம்பிகா முன்னிலையில் போலீஸாா் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினா்.

தொடா்ந்து மோகன் பட்டேலின் வீட்டில், அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீஸாா் பதிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் கையெழுத்திடுமாறு கேட்டபோது அவா்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆவணங்களை போலீஸாா் எடுத்துச் சென்றனா். மேலும் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை (லாக்கரை) திறந்து காட்டுமாறு போலீஸாா் தெரிவித்தனா்.

அதற்கு வீட்டில் இருந்தவா்கள் சாவி இல்லை எனத்தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் சுமாா் 500 கிலோ எடை கொண்ட அந்த லாக்கரை அங்கிருந்து தகா்த்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வெளியே எடுத்து வந்தனா். பின்னா் கிராம நிா்வாக அலுவலா் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டடு, மீட்பு வாகன (கிரேன்) உதவியுடன் காவல்நிலையத்துக்கு தூக்கிச் சென்றனா்.

மணப்பாறை பகுதியில் இன்றைய மின் தடை ரத்து

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் பொ. பிரபாகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள ச... மேலும் பார்க்க

பேக்கரிகளில் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

திருச்சி தென்னூரில் உள்ள பேக்கரிகளில் 8,000 அழுகிய முட்டைகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறையினா், இரு பேக்கரிகளுக்கு சீல் வைத்தனா். திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்துபட்டியில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், எளமணம் குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பிச்சை ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு: ஒருவா் கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வியாழக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூ... மேலும் பார்க்க

துறைகளில் சிறந்தவா்களுக்கு தமிழ்ச் சங்க விருது

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் சங்கத்தின் முன்னாள் அமைச்சா் சா. பெரியசாமியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களை போற்றுவோம் நிகழ்ச்சி சங்க வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா். மத்திய அரசின் பாதுகாப... மேலும் பார்க்க