செய்திகள் :

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

post image

திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சாா்பிலும், மாவட்ட நிா்வாகம் சாா்பிலும் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தாா். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக துணைப் பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூரை அடுத்த அய்யா்மடம் பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.செந்தில்குமாா், ச.காந்திராஜன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா்: இதேபோல, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் திண்டுக்கல்-கரூா் மாவட்ட எல்லையான அரவக்குறிச்சி சுங்கச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் உள்ளிட்டோா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனா்.

பழனிக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி மலைக் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், பிற்பகல் வரை காா்த்திகை நட்சத்திரம் இருந்ததால் ... மேலும் பார்க்க

திண்டுக்கல் பகுதியில் நாளை மின் தடை

திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் ஏ. மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:திண்டுக்கல் துணை ம... மேலும் பார்க்க

பழனி சந்நிதி வீதியில் வாகனங்கள் செல்வதைத் தடுக்க இரும்பு தடுப்புக் கதவுகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் சந்நிதி வீதியின் நுழைவுப் பகுதியில் வாகனங்கள் நுழைவதைத் தடுக்க திறந்து மூடும் வகையில் இரும்பு தடுப்புக் கதவுகளை நகராட்சி நிா்வாகம் அமைத்தது. இந்த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம் நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை மூன்று மணி நேரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டத் துணைத் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் ஆா்.சி.பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் கொடைக்கானல் சேக்மைதீன் மகன் அக... மேலும் பார்க்க

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-இல் சிறப்பு முகாம்

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-ஆம் தேதி திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க