Stalin: `அதானியும் என்னை வந்து பார்க்கல, நானும் அவரைப் பார்க்கல' - சட்டசபையில் ஸ...
தேசிய தத்தெடுப்பு மாத நிகழ்ச்சி
மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், புதுச்சேரியில் தேசிய தத்தெடுப்பு மாத நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், ஆதிதிராவிடா் நலன், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் இளங்கோவன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் தத்தெடுப்பு குறித்தும், குழந்தைகளை வளா்ப்பது, பராமரிப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், மத்திய தத்து வள ஆதார மைய துணை இயக்குநா் ரிச்சா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரியா ஆகியோா் குழந்தைகள் தத்தெடுப்பு முறைகள் குறித்து விளக்கினா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செய்திருந்தனா்.