மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு பாரதி விழா நாளை நடைபெறுகிறது
நாகூா் கந்தூரி விழா: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாகூா் கந்தூரி விழாவை முன்னிட்டு, காரைக்கால் - திருச்சி , தஞ்சை, பெங்களுரூ ரயில்களிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகூா் கந்தூரி விழா டிச. 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த விழா டிச. 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால், பக்தா்களின் வசதிக்காக டிச. 10-ஆம் தேதி முதல் டிச.12-ஆம் தேதி வரை கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், காரைக்கால் - திருச்சி, தஞ்சை, பெங்களுரூ ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
திருச்சி - காரைக்கால் (06490), காரைக்கால் - தஞ்சை (06457), பெங்களுரூ - காரைக்கால் - பெங்களுரூ (16529/16530) ஆகிய ரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.