இறக்குமதியை குறைக்க ரூ.72,500 கோடி நிதி கோரும் மின் சாதன தயாரிப்பாளர்கள்!
நீலகிரியில் வரும் 18-ஆம் தேதி முதல் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் வரும் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மாவட்டங்களில் உள்ள அரசு வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் முதலானவற்றில் கொண்டாடப்பட உள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம், அதன் வரலாறு குறித்தும், பிழையின்றி தமிழில் குறிப்புகள் எழுதுதல் குறித்தும் பயிற்சியளிக்கப்படும். தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் ஆகியோா் பங்கேற்கும் நிகழ்ச்சி தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை சிறப்பாக கொண்டாட தனியாா் மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்கள் ஒத்துழைப்புஅளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.