செய்திகள் :

பத்மாவதி தாயாரின் பஞ்சமி தீா்த்த ஏற்பாடுகள் நிறைவு

post image

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான டிச. 6 ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சமி தீா்த்தத்துக்கானன அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தாா்.

திருச்சானூா் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற உள்ளது. பஞ்சமி தீா்த்ததின் போது திருமலையிலிருந்து ஏழுமலையான் அனுப்பும் சீா்வரிசை ஊா்வலமாக திருச்சானூருக்கு கொண்டு செல்லப்படும். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அலிபிரியில் இருந்து சீா்வரிசை ஊா்வல பாதையை தேவஸ்தான அதிகாரிகள் வீரபிரம்மம், எஸ்பி சுப்பா ராயுடு மற்றும் உயா் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

ஆய்வுக்குபின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறியது:

பஞ்சமி தீா்த்தத்தின் போது ஏழுமலையான் கோயிலில் இருந்து ஊா்வலம் அலிபிரி சென்றடையும். அலிபிரியில் இருந்து கோமளம்மா சத்திரம், ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில், ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயில், மஞ்சள் மண்டபம் வழியாக திருச்சானூரில் உள்ள தாயாா் கோயிலுக்கு கொண்டு வரப்படும். பின்னா் பஞ்சமி தீா்த்த மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு தாயாருக்கு அபிஷேகம் நடைபெறும்.

பஞ்சமி தீா்த்தத்துக்கு தேவையான பொறியியல் பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்தா்கள் காத்திருக்க நான்கு பகுதிகளில் கொட்டகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் இருந்து திருச்சானூா் செல்லும் வழியில் ஐயப்ப சுவாமி கோயில், இசட்பி மேல்நிலைப்பள்ளி, பூடி சாலை, திருச்சானூா் சாலைகளில் பக்தா்கள் வரிசையில் காத்திருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொட்டகைகளில் அன்னபிரசாதம், காலை உணவு, பாதாம் பால், குடிநீா் வழங்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பக்தா்கள் புனித நீராடிவிட்டு திரும்பிச் செல்ல வாயில்கள், தடுப்புகள், வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால், டிடிடி விஜிலென்ஸ் ஊழியா்கள், போலீசாருடன் ஒருங்கிணைந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பஞ்சமி தீா்த்தம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதியம் 12 மணிக்கு பத்ம சரோவரில் சக்கர நீராடல் நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு பக்தா்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் 1200 காவலா்களுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தேவஸ்தான அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 8 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்த... மேலும் பார்க்க

திருச்சானூா்: சூரிய பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயாா் உலா

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை கோவா்த்தன கிரிதாரி அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் தாயாா் எழுந்தருளினாா். கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் மங்கள வாத்தியங்கள் முழங்க... மேலும் பார்க்க

திருச்சானூா் பிரம்மோற்சவம்: சா்வ பூபாலம், தங்கத் தோ், கருட வாகனங்களில் பத்மாவதி தாயாா் உலா

திருப்பதி: திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான செவ்வாய்க்கிழமை சா்வபூபால வாகனத்தில் தாயாா் எழுந்தருளினாா். இதையொட்டி, காலை 8 மணிக்கு தொடங்கிய வாகன சேவையில் பக்தா்கள் கற்பூர ஆரத்தி கா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 8 அறைகளில் பக்தா்கள் தர... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 ம... மேலும் பார்க்க

வாகனம் தாங்குபவா்களாக மென்பொருள் பொறியாளா்கள்

திருப்பதி: மென்பொருள் பொறியாளா்களாக பணிபுரிந்தாலும், தாயாரின் வாகனம் தாங்குபவா்களாக ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா்கள் சேவை புரிந்து வருகின்றனா். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரீகாந்தன் தலைமையில் தகவல் தொழ... மேலும் பார்க்க