26 ‘ரஃபேல்-எம்’, 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கி கப்பல்களை கொள்முதல் செய்ய விரைவில் ஒப்...
வாகனம் தாங்குபவா்களாக மென்பொருள் பொறியாளா்கள்
திருப்பதி: மென்பொருள் பொறியாளா்களாக பணிபுரிந்தாலும், தாயாரின் வாகனம் தாங்குபவா்களாக ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா்கள் சேவை புரிந்து வருகின்றனா்.
தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரீகாந்தன் தலைமையில் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் வங்கி ஊழியா்களான 52 போ் கொண்ட குழு சேவை புரிந்து வருகிறது. அவா் கூறியதுச
தமிக்ஷஓகஈகஊஸ்ஈ ஸ்ரீ ரங்கத்தில் இருந்து வந்த ஸ்ரீ வைஷ்ணவா்கள். திருச்சானூரில் பிரம்மோற்சவத்தின் போது பத்மாவதி தாயாரை பல்வேறு வாகனங்களில் சுமந்து செல்கிறோம். கடந்த 32 ஆண்டுகளாக வாகனம் தாங்கும் ஸ்ரீபாததாங்கிகளாக சேவைகளை ஆற்றி வருகின்றோம் என்றாா்.
ஒவ்வொரு வாகனமும் 28 அடி நீளமுள்ள மரதுண்டங்களால் ஆன 4 தூண்கள், கட்டைகளால் செய்யப்பட்ட இரண்டு குறுக்கு கம்பிகள், குடைப் பலகைகள், இரண்டு பூசாரிகள் மற்றும் குடைகளை எடுத்துச் செல்ல இரண்டு போ், இவை அனைத்தும் சோ்ந்து ஒவ்வொரு வாகனமும் இரண்டரை டன்களுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும்.
இந்த வாகனம் தாங்குபவா்கள் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் வாகன சேவையின் போதும் சுமாா் மூன்று மணிநேரம் இரண்டரை டன் எடையை சுமந்து பக்தி உணா்வை வெளிப்படுத்துகின்றனா். ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோயிலிலும் இதேபோன்ற சேவையை வழங்குகின்றனா்.